சூடான செய்திகள் 1

பொலிஸ் கட்டளையினை மீறிப் பயணித்த கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO) – கிளிநொச்சியில் இன்று (14) காலை 6.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே இடத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கைமாறப்படப்போவதாக, பொலிஸாருக்கும், மதுவரி திணைக்களத்திற்கும் ஒரே நேரத்தில் தகவல் கிடைத்ததையடுத்து இரு தரப்பினரும் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.

மதுவரி திணைக்களத்தினர் தனியாரிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த வாகனத்தில் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மேலும் புதிய ரக வாகனம் ஒன்றிலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை அறிந்து கொண்ட பொலிஸார், குறித்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

இதன்போது குறித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் வாகனத்தை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது மதுவரி திணைக்களத்தினரால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த கார் ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வெடித்த மற்றும் வெடிக்காத துப்பாக்கு ரவை கூடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

Related posts

வானிலையில் சிறிது மாற்றம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சீரற்ற பொலித்தீன் உற்பத்தி பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை