உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTV|புத்தளம்) –  புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(19) காலை 8 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (18) மாலை 4.30 மணி முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

பைசர், மனோ, முத்து முஹம்மது, சுஜீவ எம்.பிக்களாக பதவிப்பிரமாணம்

editor