சூடான செய்திகள் 1

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்தியா பயணம்

(UTV|COLOMBO) – தற்காலிக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர இந்தியாவின் புது டில்லியில் அமைந்துள்ள தேசிய உளவுத்துறை கற்கை நிலையம் நடத்தும், கடும்போக்குவாதம் மற்றும் அதுசார்ந்த மறுசீரமைப்பு குறித்த விஷேட பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளமையினாலேயே குறித்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பணிப்பாளராக செயற்பட்ட, பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொதுமக்கள் உறவுகள் பிரிவு ஆகியவற்றின் பதில் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சர் அசோக தர்மசேனவும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பயிற்சிநெறி நாளை(22) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல பகுதிகளில் பலத்த மழை

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு