சூடான செய்திகள் 1

பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் இரத்து-பொலிஸ் மா அதிபர்

(UTV|COLOMBO)-இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்களை பொலிஸ் தலைமையாகத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று (04) காலை உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் நேற்று மாலை மீண்டும் பொலிஸ் மா அதிபரினால் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கலந்துரையாடலுக்காக வேறு தினத்தை விரைவில் வழங்குவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறுகின்ற மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக இந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஶ்ரீ.சு.கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து  பேர் பதவி நீக்கம்…

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்