உள்நாடு

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்கிசை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ்எஸ்பி இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Related posts

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல

150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை – சிவப்பு எச்சரிக்கை

editor

கொரோனா பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது [UPDATE]