சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சேவை நிமித்தம் மற்றும் அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ்மா அதிபரினால் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன் அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

நிந்தவூர் பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம் – ஆசிரியர் பொலிஸில் சரண்

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்