உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ மத்திய மாகாணத்தில் இருந்து கொரோனா ஒழிப்புப் பணிக்காக பொலிஸ் மா அதிபருக்கு உதவும் பின்னணியில் இடம்பெறும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வருக்கு மகளிர் பொலிஸ் அத்தியட்சகர்களாகவும் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக நால்வருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு