உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு)- கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் 02 பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானை – டார்லி வீதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமின்றி வீதியில் பயணித்த நால்வருக்கு குறித்த இரண்டு பொலிஸாரும் தண்டனை வழங்கியுள்ளனர்.

தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் இருவரும் குறித்த நால்வருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

நாடளாவிய ரீதியாக இன்று ஊரடங்கு அமுலுக்கு

மொட்டு அணியை வாய் மூடவைத்த மரைக்காரின் உரை : வாய்திறக்காது மயான அமைதியில் நாடாளுமன்றம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 674 : 06 [COVID UPDATE]