உள்நாடு

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல்களை, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு ரொக்கப்பரிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் 19 – நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்பில் ஷவேந்திர கருத்து