உள்நாடு

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை டரக் வண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கைதுசெய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய் : பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்