உள்நாடு

பொலிஸார் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடமாட்டாங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

விசேடமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கொவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதினால் வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருப்பதாக கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மத்திய மையம் அறிவித்துள்ளது.

கொத்தொட்டுவ, முல்லேரியாவ ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளும் THE BATTLE

விஜயதாச விவகாரம், அதிருப்தியில் பஷில்..!!

14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை