சூடான செய்திகள் 1

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம் அறிமுகம்

(UTV|COLOMBO) – பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு www.npc.gov.lk என்ற புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவும், காணொளி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேபோன்று பொலிஸ் தொடர்பில் பொதுமக்கள் காணும் சில தவறுகளைக் கூட தமது கையடக்க தொலைப்பேசி ஊடாக பதிவுசெய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

தாம் செய்த முறைபாடு தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறியவும் முடியும். முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் பொழுது கணணியின் ஊடாக வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு குறிப்பிடுவதன் மூலம் இதனை அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.