உள்நாடுபிராந்தியம்

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜென்ட் ஒருவருக்கு 20,000 ரூபாவை இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடை திருட்டு சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவால் தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களின் பெயர்களை, குறித்த வழக்கின் சாட்சியாளர்களாக பெயர் மாற்றம் செய்வதற்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தம்பதெனிய மற்றும் அலவ்வ பகுதிகளைச் சேர்ந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் நேற்று (6) பிற்பகல் 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கடைக்குள்ளும், பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகிலும் மாலை 4 மணியளவில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே 20 இலங்கையர்கள் தஞ்சம்

நாளை அரச பொது விடுமுறை இல்லை

இரண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து!