உள்நாடு

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர சுற்றிவளைப்பில் சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச்சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நேற்று(13) மாலை 6 மணி முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த காலப்பகுதியில் சுமார் 215 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதேவேளை, கடந்த மார்ச் 20 திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய சுமார் 26,830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 6845 வாகனங்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

Related posts

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’