உள்நாடு

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு – பெண் உட்பட பலர் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு சிலர் இடையூறு விளைவிப்பதையும், பலவந்தமாக அழைத்துச் செல்வதை காட்டும் வீடியோ வௌியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு, அதே நாளில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (01) ஒரு பெண் சந்தேகநபரும், 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபருக்கு 35 வயது என்றும், ஏனைய சந்தேக நபர்கள் 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்

பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வை கூறிய ஜனாதிபதி ரணில்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்