உள்நாடு

பொலித்தீன் தடையினை மீறினால் ஒரு இலட்சம் ரூபா அபராதம்

(UTV | கொழும்பு) – ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நாட்டில் சில வகை பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களது உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவைக்கு தடை விதிக்கப்படவுள்ள நிலையில், அதனை மீறுபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத லன்ச்ஷீட்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

மலையகம் – 200 நடைபயணம் மாத்தளையில் நிறைவு – கொண்டாடிய மக்கள்.