உள்நாடு

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனத்தின் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேசத்தின் குடமுருட்டி பகுதியில் சட்டவிரோத மணல் வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.

இதன்போது டிப்பர் வாகனத்தை பொலிசார் சோதனையிட முயற்சித்த போது டிப்பர் வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

சுமார் 13 கிலோமீற்றர் தூரம் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் பூநகரி பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

டிப்பரில் பயணித்த ஒருவர் இதில் காயமடைந்துள்ளார்.

அதில் பயணித்த மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Related posts

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற நடவடிக்கை!