(UTV | கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.
“நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழ். நிருபர் பிரதீபன்-
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news-alert-4-1024x576.png)