உள்நாடு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமரிடமிருந்து Road map

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தேச வரைபடமொன்று எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று அதற்கான பாதைவரைபடத்தை இறுதி செய்து நடைமுறைப்படுத்த நம்புவதாகவும் தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்குகள் குறித்து உரையாற்றினார்.

அப்போது, ​​நாட்டில் நிலவும் பொருளாதார பேரழிவைக் குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து விவாதித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அலி சப்ரி, அனுர பிரியதர்ஷன யாப்பா, சரித ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்