உள்நாடுவணிகம்

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஆலோசனை

(UTV | கொழும்பு) –  உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று (09) மாலை கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நியமனம்

மின்சாரம் ,நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் விசேடசெயற்திட்டம்

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை