சூடான செய்திகள் 1

பொரள்ளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை மோதிச் சென்ற நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரான நவிந்து ரத்னாயக்க என்பவரே இவ்வாறு 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 

 

 

 

 

Related posts

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

பண்டிகைக் காலத்தில் சாதாரண விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்