உள்நாடு

பொரளை பகுதியில் ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை

(UTV | கொழும்பு) – பொரளை பகுதியில் ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டி கொலை

பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூவர், அங்கிருந்த இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் டி.ஆர்.பிரதீப் குமார் (28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே சந்தேக நபர்கள் மூவரும் நேற்று (15) குறித்த வீட்டுக்குள் புகுந்து இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி – லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி