கேளிக்கை

“பொன்னியின் செல்வன்” திரைப்பட டிரைலர் வெளியானது

(UTV |  சென்னை) – கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர். அப்போது 3.23 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டிரைலருக்கு தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சூர்யாவுக்காக லண்டன் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ்

ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா?

விடுதலைப்புலிகள் தலைவராக பாபிசிம்ஹா…