உள்நாடு

பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

(UTV|கொழும்பு)- பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறு குற்றங்களுடன் தொடர்புடையோருக்கே ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர

SLFPயின் புதிய நியமனம்!