உள்நாடு

பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

(UTV| கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக கடற்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்து கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

கடற்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த முகாமில் இருந்த 4000 வீரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனரா? என்பதை அறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி பழகிய ஏனைய கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை இரத்துச் செய்துள்ளதாகவும் கீழ்மட்ட அங்கத்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுமுறையில் இருக்கும் அல்லது முகாமுக்கு வெளியில் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை 0112 44 53 68 அல்லது 0117 19 22 51 என்ற தொலைப்பேசி இலக்கங்களை அழைத்து அறிந்து கொள்ள முடியும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் 0112 44 14 54 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் 011 220 13 65 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்படை மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கை [VIDEO]

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டது

editor