உள்நாடு

பொது போக்குவரத்துக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறதா?

(UTV | கொழும்பு) – பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“.. சுகாதாரத் துறையிலிருந்து ஒரு சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வு ரீதியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையினை நாம் கடைபிடிக்க முடியும்.

ஏனெனில் இது ஒரு தொற்றுநோய். அந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும். அதன்படி, இவர்கள்தான் பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினால், அதற்கு ஏற்றாற்போல் மாற வேண்டும்.

இது குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் நாங்கள் அளிக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டு எழுத்து மூலம் எமக்குத் தெரிவிக்கப்படுமாயின், தனியார், SLTB மற்றும் ரயில் துறைகளுக்கு அறிவிக்கப்பட்டு தடுப்பூசி அட்டைகளை சரிபார்க்க அறிவுறுத்தலாம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

கடன் தவணைகள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்