(UTV | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு PCR பரிசோதனையை மேற்கொள்ள போவதாக தெரிவித்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்ற பேரை தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் மஹவ – கெத்தப்பஹூவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுமார் மூன்றரை பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கெத்தப்பஹூவ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் தாம் PCR பரிசோதனை மேற்கொள்ள போவதாக தெரிவித்து வீட்டிலிருந்தவர்களுக்கு மாத்திரை வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-7-1024x576.png)