உள்நாடு

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாகிறது

(UTV | கொழும்பு) – கொவிட் தடுப்பூசி அட்டையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டமை அடையாளப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சு அறித்துள்ளது.

தற்போது பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசியின் இரண்டாம் அளவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு