உள்நாடு

பொதுமன்னிப்பு காலத்திற்குள் 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைவு

(UTV|கொழும்பு) – பொதுமன்னிப்பு காலத்திற்குள் 10 அதிகாரிகள் உள்ளிட்ட முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவத்தை சேர்ந்த 2,974 பேரும் கடற்படையை சேர்ந்த 537 பேரும் விமானப்படையை சேர்ந்த 788 பேரும் மீண்டும் சேவையில் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேவையை கைவிட்டுச் சென்ற முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்

கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிக்கப்பட்டது

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்