சூடான செய்திகள் 1

பொதுமக்கள் அனைவரும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேற்படி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று காலி மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைப் போன்ற தோற்றத்தை சித்தரிப்பதற்கு சிலர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதனால் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்