சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

(UTV|COLOMBO) வளிமண்டலவியல் திணைக்களம்  மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை கடலுக்கு அருகாமையில் உள்ள கடற் பிரதேசத்தில் கடல் அலை 2.5 மீற்றர் அளவு தொடக்கம் 3 மீற்றர் வரையான கடல் அலை உயர்வடையக்கூடும் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைவாக இந்த கடல் அலை கரைக்கு வரக்கூடும் எனவும் அடிக்கடி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்த கரையோரப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இது தொடர்பில் கூடிய அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது