அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கான ஓர் அவசர அறிவிப்பு

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் தேசிய மக்கள் சக்தியினை குறிவைத்து, மக்களிடையே போலியான தகவல்கள் மற்றும் வெறுப்பை பரப்பும் சதிதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

ஒரு நபர் தன்னை அமைச்சர் முனீர் முளப்பர் என்று அடையாளப்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, கட்சித் செயட்பாடுகளுக்காக நிதி உதவி செய்யுமாறு கோரி பணம் கேட்டுள்ளார்.

இம்மோசடியாளர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தனவந்தர்களை குறிவைத்து எமாற்றி பண மோசடி செய்ய முயன்றுள்ளார்.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாரும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் ஏமாறாமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், எங்களுக்கு (0779921955) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஊடக செயலாளர்,
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சு.

Related posts

பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

பலத்த காற்று வீசும் சாத்தியம்

வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு