உள்நாடு

பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையான செயற்பாடுகளுக்காக, பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியே பயணிக்க வேண்டும்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், எதிர்வரும் 17 ஆம் திகதி வெளியே செல்ல முடியும் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

editor

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்