உலகம்

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை

(UTV|சீனா) – கொரொனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவில் சுமார் 9 மில்லியன் மக்கள் வசிக்கும் உஹான் நகரில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டதை முன்னிட்டு, எதிர்வரும் வாரத்தில் பெருமளவான மக்கள் வெளி இடங்களுக்கு பயணிக்க உள்ள நிலையில், இந்த போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவுக்கு அப்பால், அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்தவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

சமூக வலைதளங்களில் ‘ட்ரம்ப்’ முடக்கம்