உள்நாடு

பொதுப்போக்குவரத்துகளில் மட்டு

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுள்ளன.

இதற்கமைய, தனியார்துறை பேருந்துகள், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் 40 வீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கடமைகளுக்காக செல்பவர்கள் மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளில் பயணிக்க முடியும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

   

Related posts

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த மத்திய நிலையங்கள்

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்