விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு அனுஷா தில்ருக்ஷி கொடிதுவக்கு தெரிவாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் ஹேமன் தீவைச் சேர்ந்த ப்ரென்ட் பான்ஸ் இவரிடம் தோல்வியடைந்தார். அனுஷா கொடிதுவக்கு பங்கேற்கும் முதலாவது அரையிறுதி போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும். அதன் போது இவர் இந்திய வீராங்கனை மேரி கொம்முடன் மோதவுள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 84 பத்தகங்களுடன் அவுஸ்திரேலிய முன்னிலை வகிக்கிறது. அவுஸ்திரேலிய இதுவரை 31 தங்கம், 25 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

விராட் கோலிக்கு BCCI மரியாதை கொடுக்கவில்லை

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்து