அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் – 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 01 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 15 வன்முறைச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1248 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 287 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

ஷாபியை நாசமாக்கிய சன்ன ஜயசுமனவை SJBக்குள் எடுக்க ரிஷாட், மனோ கடும் எதிர்ப்பு!

ஊரடங்கு சட்டத்தை மீறியதில் இதுவரை 265 பேர் கைது

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!