உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்ப்பு இன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்று மாலை மூன்று மணிக்கு உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்படவுள்ளது..

இம்மாதம் 20ம் திகதி தேர்தலை நடத்த உத்தேசித்து, தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது.

எனினும் கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இன்னும் தணிக்கப்படாத நிலையில், குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை இரத்து செய்யக்கோரி, அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 10 நாட்களாக உயர் நீதிமன்றின் 5 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட நிலையில் இந்த மனுக்கள் குறித்த தமது முடிவை இன்று அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் செய்யவில்லை-மஹிந்த

அவசரகாலச் சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துகிறது

கள்வர்களை பிடிப்பதற்குரிய சட்டங்கள் எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது – ரணில்

editor