அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை) 3,359 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 956 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,346 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன

Related posts

அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

editor

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை வீழ்ச்சி