உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

(UTV|கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று(28) எட்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஏழாவது தினமாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்

அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்ட சந்தேகநபர் கைது!