உள்நாடு

பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இன்று(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த முறை தபால் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

பல பட்டதாரிகளை உருவாக்கிய பழீல் ஆசிரியரின் இழப்பு – இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி.