அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது

இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும்.

இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அதில் 196 பேர் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஏனைய 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

ஒக்டோபர் 11 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

வேட்புமனு தாக்கல் முடிவடையும் நாளில், வீதிகளில் பேரணி, வீதிகளில் ஒன்று கூடுவது என்பன தடை செய்யப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

மேலும் 221 பேர் நோயில் இருந்து மீண்டனர்

முதல் ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில்….

வேலுகுமார் எம்.பி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor