உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) -பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொதுத் தேர்தல் இந்த மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 52 இலட்சத்தை கடந்தது

கத்தான்குடியில், சஹ்ரானின் குடும்பத்தினர் 30 பேர் ஒரே வீட்டில் கைது!