சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன கட்சியின் ​தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) ​தேர்தல் நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி  ஆரம்பித்துள்ளதாக குறித்த கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்காக, பல அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேற்படி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்திலிருந்து இணைந்து செயற்பட்ட சகோதர அரசியல் கட்சிகளுடன் முன்னரைப் போலவே இணைந்து செயற்படவுள்ளதாகவும் இதுவரை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படாத, ​ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றும் நோக்கில் அக் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

குருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்