வகைப்படுத்தப்படாத

பொசொன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

(UDHAYAM, COLOMBO) – பொசொன் தினம் முன்னிட்டு அனுராதபுரத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்களின் வசதி கருதி 28 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை முதல் 10ம் திகதி வரை இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடும். இதுதவிர 8ம், 9ம் திகதிகளில் அனுராதபுரத்திற்கும் மதவாச்சிக்கும் இடையில் அதேபோல் அனுராதபுரத்திற்கும் மகோவிற்கும் இடையில் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் 72 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு விசேட ரயில் கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்லும். 7ம் திகதி கொழும்புக் கோட்டையில் இருந்து 6 விசேட ரயில்கள் அனுராதபுரம் நோக்கி பயணிக்கும்.

இதுதவிர அவிசாவளையில் இருந்து அனுராதபுரத்திற்கான ரயில் பிற்பகல் 2.45ற்கு பயணிக்கும். 8ம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடும். அன்றைய தினம் மாகோவில் இருந்து காலை 10.40ற்கு மற்றுமொரு ரயில் சேவையில் ஈடுபடும்.

எதிர்வரும் 9ம் திகதி மருதானையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு அனுராதபுரம் நோக்கி ஒரு ரயில்புறப்பட்டுச் செல்லும். 9ம், 10ம் திகதிகளில் மாகோவில் இருந்தும் விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

කළුතර ප්‍රදේශ කිහිපයකට පැය අටක ජල කප්පාදුවක්