சூடான செய்திகள் 1

பொசன் பூரணையை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டம்

(UTV|COLOMBO) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் பிரிவெனாக்கள், பௌத்த பாடசாலைகள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர் மற்றும் கல்வி வலயங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதோடு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி பாடசாலை அதிபர்கள் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளை முதல் பாடசாலை சூழல் மற்றும் வகுப்பறைகளை பௌத்த கொடிகளைக் கொண்டு அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலை மாணவர்கள்எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில்  பொசன் தினத்தை முன்னிட்டு தங்களது வீடுகளையும் அலங்கரிக்க வேண்டும் எனவும் பொசன் பூரணை தினத்தில் மாணவர்கள் பெற்றோர், பெரியோரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை

பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது