சூடான செய்திகள் 1

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து

(UTV|COLOMBO)-பொகவந்தலாவை – ரொக்கில் தோட்டம், வானக்காடு பகுதியில் லயன் குடியிருப்பில் இன்று(29) பரவிய தீ காரணமாக 14 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானக்காடு தோட்டத்திலுள்ள ஆலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம் அறிமுகம்

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!