வகைப்படுத்தப்படாத

பொகவந்தலாவயில் மண்சரிவு 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் இடம்பெயர்வு

(UDHAYAM, COLOMBO) – நாடடில் நிலவுகிற சீரற்ற வானிலையினால் பொகவந்தலாவ ரொப்கில் கீழ்ப் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிலுப்பு ஒன்றின் அருகாமையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்தத்தில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை வீடுதி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் 30.05.2017 செவ்வாய் கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த அனர்த்தத்தினால் கற்பாறை சரிந்து விழுந்த பகுதியில் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை பாதுகாப்பாக மீட்கபட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்காலிமாக தங்கவைக்கபட்டுள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களை 319 ஜி பிரிவு கிராம உத்தியோகத்தரின் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அறிவிக்கபட்டு அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ஏமனில் 3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி!

வித்தியா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Low water pressure to affect several areas in Colombo