உள்நாடு

பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்தயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிய உதவுமாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளவர்களின் உதவியை காவல்துறையினர் நாடியிருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.

Related posts

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை [VIDEO]

நீர் கட்டணப் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு