உலகம்

பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன்

(UTV | டெஹ்ரான்) – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் என ஈரான் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, டெஹ்ரானில் செய்தியாளா்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டபோது, இல்லை என பதில் அளித்தார். மேலும், ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல் நாசா் ஹெம்மாட்டி, பைடனை சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்

கொரோனா வைரஸ் – ருவாண்டாவில் முதல் மரணம்